Homeசெய்திகள்கேள்வி & பதில்மகளீர் தினம்: பெண்கள் வாக்குரிமை பெற்ற வரலாறு

மகளீர் தினம்: பெண்கள் வாக்குரிமை பெற்ற வரலாறு

-

மகளீர் தினம்: பெண்கள் வாக்குரிமை பெற்ற வரலாறு
என்.கே.மூர்த்தி பதில்கள்

கணேசன் – அரசம்பட்டு
கேள்வி – இதுவரை நடந்த போராட்டங்களில் வித்தியாசமான போராட்டம் ஏதாகிலும் இருக்கிறதா?

இதுவரை நடந்த போராட்டங்களில் வித்தியாசமான போராட்டம் ஏதாகிலும் இருக்கிறதா?

பதில்: இருக்கிறது நண்பா, அது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான போராட்டம்.

அந்த அம்மையார் பெயர் எமிலி பேங்கர்ஸ். அவர் பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் பெண்கள் உரிமை இயக்கத்தின் தலைவி. அவர் பிரதமரை சந்தித்து பிரச்சனைகளை சொல்லி தீர்வு காண பலமுறை முயன்று பார்த்தார். அதற்கு அனுமதி கிடைக்கவே இல்லை. 1860 ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்து தலைமை அதிகாரியை சந்தித்தார். இந்த நாட்டின் பிரதமருக்கு ஒரு பார்சல் அனுப்ப வேண்டும் என்றார்.
என்ன பார்சல் என்று அதிகாரி கேட்டார்.

“நான் தான், என்னைத்தான் பார்சலாக அனுப்புங்கள் என்றார்”
தலைமை அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள்? Are you joking? என்கிறார்.

இல்லை, சீரியசாகவே சொல்கிறேன். என்னை பார்சலாக அனுப்புங்கள் என்றார்.
“உங்களை எப்படி பார்சலாக அனுப்ப முடியும்?” என்று கேட்டார் அதிகாரி.
உங்களுடைய அஞ்சலக விதிகளில் , மனிதர்களை பார்சலாக அனுப்பக் கூடாது என்கிற சட்டம் இருக்கிறதா? எடுத்து காட்டுங்கள் என்கிறார் எமிலி பேங்கர்ஸ்.
உடனே தலைமை அதிகாரி, அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற அதிகாரிகளை அழைத்து விவாதித்தார். இந்த பெண்மணி பிரதமருக்கு தன்னை பார்சலாக அனுப்பச் சொல்கிறார். அப்படி என்னை பார்சலாக அனுப்ப முடியாது என்றால் 10,000 பெண்களை திரட்டி அலுவலகம் வாசலில் போராட்டம் நடத்துவேன் என்கிறார். என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.

ஒருவழியாக முடிவிற்கு வந்து எமிலி பேங்கர்ஸ் அம்மையாரின் வலது கை மணிக்கட்டில், ஒரு அட்டையில் பிரதமர் அலுவலக முகவரியை எழுதி கட்டி தொங்கவிட்டு, அவருடன் அஞ்சலக ஊழியர் ஒருவரையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அங்கே சென்று, பிரதமருக்கு பார்சல் வந்திருக்கிறது என்கிறார். என்ன பார்சல் என்று கேட்கிறார்கள். இந்த அம்மையார் தான் அந்த பார்சல் என்கிறார் தபால் ஊழியர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நீண்ட நேரம் வாதம் நடக்கிறது. நான் தான் பார்சல், முறைப்படி வந்திருக்கிறேன். என்னை பிரதமரிடம் அனுப்புங்கள். நான் அவரை பார்த்தாக வேண்டும் என்று உறுதியுடன் வாதிடுகின்றார்.

இதுவரை நடந்த போராட்டங்களில் வித்தியாசமான போராட்டம் ஏதாகிலும் இருக்கிறதா?

பிரதமருக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. அவர், எமிலி பேங்கர்ஸை அழைத்து வரச்சொன்னார். பிரதமரிடம், அந்த அம்மையார், பெண்களையும் சக மனிதராக மதிப்பு கொடுத்து, எங்களுக்கும் வாக்குரிமை வழங்குங்கள் என்று வலியுறுத்துகிறார். பிரதமர்,நான் அதற்கான ஏற்பாடு செய்கிறேன் என்றார். அதனை தொடர்ந்தும் ஆறு ஆண்டுகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து, பலபேர் உயிரிழந்து தான் பெண்களுக்கான வாக்குரிமை பெறப்பட்டது. ஆனால் இன்று அந்த வாக்கு சீட்டை எதற்கு பயன்படுத்துகிறோம்? யாருக்கு பயன்படுத்துகிறோம் என்று சிந்திக்காமல் வாக்கு செலுத்துகிறோம்.

மகளிர் தின வாழ்த்துக்கள் !!

தரணி – சென்னை
கேள்வி – மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடுத்திருப்பதைப் பற்றி?மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடுத்திருப்பதைப் பற்றி?

பதில்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் பம்பரம் சின்னம் கேட்டு அக்கட்சியினர் நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் சாதகமான பதிலை அளித்திருக்கிறார்கள். இருந்தாலும் எதற்காக அவர்களுக்கு தனி சின்னம்? என்ற கேள்வி எழுகிறது. திமுக கூட்டணியில் ஒதுக்கும் ஓரிரு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவதுதான் நல்லது என்பது என் கருத்து.

சின்னச்சாமி – சேலம்
கேள்வி – “இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக 30 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளாரே?

"இந்தியா" கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக 30 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளாரே?

பதில்: நாடு சுதந்திரம் அடைந்ததும் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு, ராணுவம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, ரயில்வே துறை விரிவாக்கம், விமான தளம், விமான போக்குவரத்து விரிவாக்கம், கப்பல்துறை என்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் உருவாக்கினார். கட்டமைத்தார். வேலை வாய்ப்புகளை உருவாக்கினார். நாடு சுதந்திரம் அடையும்போது ஒன்றுமே இல்லாமல் இருந்த இந்தியாவில் அனைத்தையும் கட்டமைத்தவர் ஜவஹர்லால் நேரு. இன்று அவருடைய வாரிசு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், புதிய இந்தியாவை படைப்போம் என்று கூறுவதில் உண்மை இருக்கிறது.

ராகவன் – ஆதம்பாக்கம்
கேள்வி – அய்யா நீங்கள் எழுதுவது எல்லாம் சரி, உங்கள் கணிப்பும் மீறி மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன செய்வீர்?

மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன செய்வீர்?

பதில்: ஒரு முறை சீடனைப் பார்த்து புத்தர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். சீடரோ, அருகில் உள்ள ஆற்றை நோக்கி ஓடினார். ஆனால் அப்போதுதான் வண்டி ஒன்று அந்த ஆற்றை கடந்து சென்றிருந்தது. அதனால் நீர் குழம்பி போய் கிடந்தது. சீடர் திரும்பி வந்துவிட்டார். சரி சிறிது நேரம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்றார் புத்தர். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் போனார். அப்பொழுதும் தண்ணீர் தெளியவில்லை. மூன்றாவது முறை போனார், அப்பொழுதும் போதுமான அளவிற்கு நீர் தெளியவில்லை. பிறகு நான்காவது முறை தெளிந்த நீரை சீடர் கொண்டு வந்தார்.

புத்தர் கேட்டார், “நீர் எப்படி தெளிந்தது? நீ என்ன செய்தாய்? என்றார். நான் ஒன்றுமே செய்யவில்லை நீர் தானாகவே தெளிந்துவிட்டது என்றார். புத்தர் சிரித்துக் கொண்டார். சில நேரங்களில் நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் காலம் எதையும் சரி செய்து விடும். அதனால் சில நெருக்கடியான நிலையில் அமைதியாய் இருப்பதே சிறந்தது.

அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்விபதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

MUST READ