தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க.- ம.தி.மு.க. இடையே இழுபறி நீடித்தது. இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ எம்.பி., “எங்களுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. தோழமைக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதி நிலவரம் தெரிவிக்கப்படும். மாநிலங்களவை சீட் பற்றி பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுச் செய்யப்படும். மாநிலங்களவைத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருப்பதால் அது குறித்து அந்த நேரத்தில் பேசுவோம். எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.