Homeசெய்திகள்சினிமாஹன்சிகா நடித்துள்ள 'கார்டியன்' படத்தின் விமர்சனம்!

ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ படத்தின் விமர்சனம்!

-

நடிகை ஹன்சிகா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார். ஹன்சிகா நடித்துள்ள 'கார்டியன்' படத்தின் விமர்சனம்! அதேசமயம் ஹாரர் திரில்லர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 1, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்தபடியாக கார்டியன் எனும் ஹாரர் திரில்லர் படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. இந்த படத்தை சபரி மற்றும் குரு சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் ஹன்சிகாவுடன் இணைந்து பிரதீப் ராயன், ஸ்ரீமன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.ஹன்சிகா நடித்துள்ள 'கார்டியன்' படத்தின் விமர்சனம்!

சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாமல் வளரும் ஹன்சிகா வேலை நோக்கத்திற்காக சென்னை செல்கிறார். அப்போது அவருடைய வாழ்க்கையில் நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருந்து வரும் ஹன்சிகாவுக்கு ஒரு கட்டத்தில் அதன் காரணம் கூறிய வருகிறது. அதாவது பேய் ஒன்று பழிவாங்குவதற்காக அஞ்சுகாவின் பழிவாங்குவதற்காக ஹன்சிகாவின் உடம்பிற்காக அவரை சுற்றி வருகிறது. எனவே பேய்க்கு உதவுவதற்காக ஹன்சிகா தனது உடம்பை வாடகைக்கு விடுகிறார். பின்னர் அந்த பேய் எப்படி பழிவாங்குகிறது என்பது தான் படத்தின் கதை.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா போன்ற படங்களின் கதையும் இது தான். பேய்க்கு உதவுவதற்காக கதாநாயகன் தனது உடம்பை வாடகைக்கு விட பின்னர் அந்த பேய் வில்லன்களை எல்லாம் பழி வாங்கிவிட்டு அந்த உடம்பை விட்டு சென்றுவிடும்.ஹன்சிகா நடித்துள்ள 'கார்டியன்' படத்தின் விமர்சனம்! ஹன்சிகா கையில் எடுத்திருக்கும் கார்டியன் திரைப்படமும் வழக்கமான பேய் படங்களின் கதைதான். இந்த படத்தில் ஹன்சிகாவின் நடிப்பு மட்டும்தான் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது என்றாலும் படத்தின் திரைக்கதை சுத்தமாக கை கொடுக்கவில்லை. சாம் சி எஸ் இன் பின்னணி இசை ஓரளவிற்கு படத்தை நகர்த்திச் செல்கிறது. அதேசமயம் ஒளிப்பதிவும் ஓகே என்று சொல்லலாம். இருப்பினும் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள் இயக்குனர்களான சபரி மற்றும் குரு சரவணன். திரையரங்குகளில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது இந்த கார்டியன். எனவே எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

MUST READ