பிரபுதேவா – வடிவேலு காம்போவில் உருவாகும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் ஒரு சில காம்போவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அத்தகைய காம்பிவில் ஒன்று நடன புயல் பிரபுதேவாவும் வைகை புயல் வடிவேலுவும் தான். காதலன், மனதை திருடி விட்டாய், மிஸ்டர் ரோமியோ, எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் இந்த காம்போவை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக ஒய் பிளட் சேம் பிளட், சிங் இன் தி ரெயின் போன்ற காமெடிகளை இன்றளவும் டிவியில் பார்த்து நாம் சிரிக்காமல் இல்லை. அதே சமயம் பேட்ட ராப் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்தகைய கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளது. இந்த செய்தி 90ஸ் ஹிட்ஸ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பொன் ராமின் உதவி இயக்குனர் ஜி எம் ராஜா இயக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 மே அல்லது ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.