தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்காக நடிகர் கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
சென்னை தியாகராய நகர் அருகில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. நிதி நெருக்கடி காரணமாக அந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக நடிகர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி நடிகர் சங்கத்தின் சார்பில் கட்டட பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியை நடிகர் சங்க கட்டுமான பணிக்காக வழங்கி வருகின்றனர். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தார். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் , தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணியை மீண்டும் தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூ. 1 கோடி காண காசோலையை கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இந்த காசோலை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது.