Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

-

ரிபெல் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர், கிங்ஸ்டன், இடி முழக்கம், கள்வன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதேசமயம் ஜி.வி. பிரகாஷ் ரிபெல் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து மமீதா பைஜு, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த படம் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிபெல் படத்தின் ட்ரைலர் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ