- Advertisement -
கோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஜிவி பிரகாஷ், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அவரது இசையில் வெளியான வெயிலோடு விளையாடி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இன்று வரை கிராமங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் அது. இதைத்தொடர்ந்து விஜய், கார்த்தி, சூர்யா, என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். மேலும், பாடல்களும் பாடி உள்ளார்.
இசை ஒரு பக்கம் இருக்க, நடிப்பிலும் ஜிவி பிரகாஷ் ஆர்வம் செலுத்தி வருகிறார். டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக அடியே என்ற படம் வெளியானது. அடுத்து கள்வன் படத்தல் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் உரிமையை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
#Kalvan storms into theaters on April 4th💥Get ready for a trunkload of excitement✨#KalvanFromApril4th
A @gvprakash Musical 🎶
Background Score @revaamusic@offBharathiraja @AxessFilm @Dili_AFF @pvshankar_pv @i__ivana_ @ActDheena @SakthiFilmFctry @Sanlokesh @DuraiKv pic.twitter.com/YH4Iik2YYT— Axess film factory (@AxessFilm) March 11, 2024