நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், பாலா இயக்கத்தில் ‘ வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கினார். ஆனால் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்த நிலையில் வர்மா படத்தை பார்த்த நடிகர் விக்ரமுக்கு திருப்தியாக இல்லை என்றும் அதனால் அப்படத்தை அப்படியே கைவிட்டு விட்டு, ஆதித்யா வர்மா என்னும் பெயரில் மீண்டும் புதிய இயக்குனருடன் கைகோர்த்து படத்தை எடுத்து வெளியிட்டனர். துருவ் விக்ரமின் அறிமுக படமாக வெளியான இந்த படம் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான். ஆதித்ய வர்மா படம் நினைத்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பு அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதைத் தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கிடையில் டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்திலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களில் இவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில் துருவ் விக்ரம், பிரபல மலையாள இயக்குனரான அஞ்சலி மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.2014 இல் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் தான் பெங்களூர் டேஸ். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்தது. அஞ்சலி மேனன் இது மட்டுமின்றி வொண்டர் வுமன் போன்ற பல வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் பல படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.இவர் அடுத்ததாக தமிழுக்கு வருகிறாராம். அதன்படி இவர் இயக்கவுள்ள புதிய படம் ரொமான்டிக் ட்ராமாவாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் தான் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.