Homeசெய்திகள்சினிமாமுருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்... புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரம்...

முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்… புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரம்…

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் மாவீரன் மற்றும் அயலான். இதில், மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. ரவிக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார்.

அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டு அண்மையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்குகிறார்.

இதைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருந்தார். இது சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படமாக உருவாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பெரியரிடப்படாத இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி கூடுதல் தகவலாக இப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ