மலையாள படத்தில் அனுஷ்கா… படப்பிடிப்பில் உற்சாக வரவேற்பு…
- Advertisement -
மலையாளத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வௌியான அருந்ததி திரைப்படம், அனுஷ்காவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, ரஜினி, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, வரலாற்று திரைப்படங்கள் என்றாலே அதில் அனுஷ்கா தான் நிச்சயமாக கதாநாயகியாக இருப்பார்.
அனுஷ்கா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. இதில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முரளி சர்மா ஜெயசுதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மகேஷ்பாபு இதனை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார். ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கும் கதனர் படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு படக்குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். படத்திற்கு ஏற்றபடி உடல் எடையை முற்றிலும் குறைத்துக்கொண்ட படப்பிடிப்பில் பங்கேற்ற அவரைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவரது காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் அவர் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.