Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!

ஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!

-

ஆவடி அருகே திருநின்றவூரில் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடியை அடுத்து திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்த தேவிகா (39) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் உமயபார்வதி (45) மற்றும் அவரது கணவர் செல்வகுமார் (45) ஆகியோர் என்னிடம் நன்கு பழகி, உமயபார்வதி மற்றும் அவரின் நண்பர் முரளி ஆகியோர் உமன்ஸ் சோசியல் வெல்பர் ஆர்கனைசேஷன் டிரஸ்ட் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அந்த டிரஸ்ட் மூலம் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் டெய்லரிங் கிளாஸ் மற்றும் பியூட்டிஷன் வகுப்புகள் நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் அந்த டிரஸ்ட்டு பெயரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பட்டாசு பண்டு போன்றவற்றை உமயபார்வதி மற்றும் அவரின் நண்பர் முரளி நடத்தி வந்தனர், இந்த சீட்டில் சேர்ந்தால் நல்ல பலன் இருக்கும் என்று நம்பிக்கையும், ஆசை வார்த்தையும் கூறினார்.

அவர் நடத்திவரும் சீட்டில் சேர்த்து கடந்த ஜனவரி மாதம் 2021 முதல் நவம்பர் 2022 வரை ரூபாய்.2,00,000/-ம் என இரண்டு சீட்டிற்கு மொத்தம் ரூபாய்.4,00,000/-ம் ஏலச்சீட்டு கட்டினேன்.அந்த தொகையை தராமல் ஏமாற்றி உள்ளார். இதேபோல் சுமார் 16 நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய்.18,10,374/-ம், ரொக்கமாக பணமாகவும். மேலும் சிலரிடம் தீபாவளி பண்ட் என்ற பெயரில் ரூபாய் 39,39,404/-த்தை பணத்தை ஏமாற்றி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. புகாரின் பேரில்,காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாள் மற்றும் காவல் கூடுதல் துணை ஆணையர் ஸ்டீபன் மேற்பார்வையில் உதவி காவல் ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் மத்திய குற்றபிரிவு போலீசார் உமயபார்வதியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

 

MUST READ