spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தொழில்வளம் பெருகுகிறது - முதல்வர்

மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தொழில்வளம் பெருகுகிறது – முதல்வர்

-

- Advertisement -
kadalkanni

"எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.கஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு சார்பில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 35 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 52,325 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவைக்கு 13 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில் தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வனவிலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என கோவை மாவட்டத்திற்கு 13 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 

MUST READ