Homeசெய்திகள்சினிமாபோர் தொழில் கூட்டணியில் புதிய படம்..... போட்டி போடும் தயாரிப்பு நிறுவனங்கள்!

போர் தொழில் கூட்டணியில் புதிய படம்….. போட்டி போடும் தயாரிப்பு நிறுவனங்கள்!

-

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான படம் போர் தொழில். இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.போர் தொழில் கூட்டணியில் புதிய படம்..... போட்டி போடும் தயாரிப்பு நிறுவனங்கள்! இவர்களுடன் இணைந்து நிகிலா விமல், சரத் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ராட்சசன் படத்திற்கு அடுத்தபடியாக பெரிய அளவில் பேசப்பட்ட படம் போர் தொழி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் ராஜா அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறி இருக்கிறார். ஆனால் முன்னணி நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனையால் மீண்டும் அசோக் செல்வனை இயக்குவதாக முடிவு செய்துள்ளாராம் விக்னேஷ் ராஜா. போர் தொழில் கூட்டணியில் புதிய படம்..... போட்டி போடும் தயாரிப்பு நிறுவனங்கள்!அதன்படி மீண்டும் இணைய உள்ள போர் தொழில் படக் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாகியுள்ளது.இருப்பினும் படம் தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த போர் தொழில் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. அதில் ட்ரிட்ண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் ஒன்று என்பது தெரியவந்துள்ளது. ஆகவே எந்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ