புதுச்சேரி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!
இது குறித்து புதுச்சேரி மாநில அரசின் நிதித்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 46%- லிருந்து 50% ஆக உயர்த்தியது போல் புதுச்சேரி மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 50% ஆக உயர்த்தி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முன் தேதியிட்டு ஜனவரி 01- ஆம் தேதி 2024- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டும் என அனைத்து அரசுத் துறைத் தலைவர்களுக்கும் நிதித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.