Homeசெய்திகள்சினிமாதமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறதா 'கங்குவா' டீசர்?

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறதா ‘கங்குவா’ டீசர்?

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறதா 'கங்குவா' டீசர்?மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இந்த படம் உருவாகி வருகிறது. அதன்படி வரலாற்று சரித்திர படமாக உருவாக்கி வரும் இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படம் பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முன்னோட்ட வீடியோவும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. அதேசமயம் படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அடுத்ததாக ரசிகர்கள் கங்குவா டீசரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே படத்தின் டீசர் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும் கலர் கிரேடிங் வேலைகள் போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகிறதா 'கங்குவா' டீசர்? ஆகையால் கங்குவா டீசர், வருகின்ற ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், கோவை சரளா,திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ