சுந்தர் சி, தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். கடைசியாக சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து ஒன் 2 ஒன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி, அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களை போல் இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் கதை களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுந்தர் சி யும் குஷ்பூ இணைந்து தயாரித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை சுந்தர் சி ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகளும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -