நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி ஏற்கனவே சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் கவினுக்கு திறப்பு முறையாகவும் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கவின். அந்த வகையில் பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடன இயக்குனர் சதிஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட புகழ் ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். கவிஞனின் 4வது படமான இந்த படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஏறத்தாழ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் முழு படம் நிறைவடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரபல நடிகர் பிரபு இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடன இயக்குனர் சதீஷ் மற்றும் கவின் உடன் இணைந்து பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- Advertisement -