யோகி பாபு நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதேசமயம் யோகி பாபு, மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் தூக்குதுரை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போட் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் யோகி பாபு பூமர் அங்கிள் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ரோபோ சங்கர், சேஷு, பழைய ஜோக்ஸ் தங்கதுரை, KPY பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்வதீஷ் இயக்கியுள்ளார். அன்பு மற்றும் கார்த்திக் கே தில்லை ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க தர்ம பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். 90ஸ் கிட்ஸ்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து நீண்ட நாட்களாக நிலுவையிலே இருந்த இந்த படம் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.