Homeசெய்திகள்சினிமாமீண்டும் ரிலீஸ் செய்யப்படும் எல்லோருக்கும் ஃபேவரைட்டான ஜெயம் ரவி படம்!

மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் எல்லோருக்கும் ஃபேவரைட்டான ஜெயம் ரவி படம்!

-

கடந்த 2018 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் சந்தோஷ் சுப்பிரமணியம்.மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் எல்லோருக்கும் ஃபேவரைட்டான ஜெயம் ரவி படம்!இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஜெனிலியா, பிரகாஷ் ராஜ், எம் எஸ் பாஸ்கர், சந்தானம், கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 2006 இல் தெலுங்கில் வெளியான பொம்மரில்லு படத்தின் ரீமேக் ஆகும். தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு மகன் சுதந்திரமாகவும் அப்பாவை கஷ்டப்படுத்தாமலும் தனது வாழ்க்கையை வாழ நினைக்கிறான். மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் எல்லோருக்கும் ஃபேவரைட்டான ஜெயம் ரவி படம்!அந்த சமயத்தில் அவனின் வாழ்வில் காதலி வர அவளையும் பெற்றோர்களின் சம்பந்தத்துடன் மணக்க நினைக்கிறான். கடைசியில் என்ன நடந்தது என்பதை காமெடியாகவும் சுவாரசியமாகவும் காட்டி இருந்தார் மோகன் ராஜா. இந்த படத்தில் ஜெனிலியா செய்யும் குறும்புத்தனங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேசமயம் ஜெயம் ரவியும் ஜெனிலியா மீது வைத்துள்ள ஆழமான காதலையும் வெளிப்படுத்தியது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இப்படம் இன்று வரையிலும் அனைத்து ரசிகர்களின் ஃபேவரைட் பொழுதுபோக்கு படமாக விளங்குகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்களில் இந்த படம் நிச்சயம் ஃபேவரைட் படங்களின் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். அந்த அளவிற்கு இப்படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் எல்லோருக்கும் ஃபேவரைட்டான ஜெயம் ரவி படம்! இந்நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி, தி நகர் ஏஜிஎஸ் சினிமாஸ் இல் மாலை 6.20 மணி அளவில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முன்பதிவுகளும் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. எனவே குடும்பத்துடன் சென்று மீண்டும் இந்த படத்தை ரசிக்கலாம்.

MUST READ