மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி உள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சூது கவ்வும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் என பலரும் நடித்திருந்தனர். டார்க் காமெடி கதை களத்தில் வெளியான இந்த படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மிர்ச்சி சிவா நடிப்பில் சூது கவ்வும் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்புடன் நாடும் நாட்டு மக்களும் என்ற டேக் லைன் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், ராதாரவி என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ் ஜே அர்ஜுன் இயக்கியுள்ளார். தங்கம் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை 2024 கோடையில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசரை விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டீசரின் இறுதியில் மியூசிக் மற்றும் ட்ரெய்லர் விரைவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சூது கவ்வும் படத்தை போல் இந்த படமும் ரசிகர்களின் பேராதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.