Homeசெய்திகள்சினிமாஎன்னது 'கல்கி' படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலா?

என்னது ‘கல்கி’ படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலா?

-

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. என்னது 'கல்கி' படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலா?அதேசமயம் இந்தியன் 3 படமும் உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இருப்பினும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கமல்ஹாசன் அரசியலில் பிசியாக இருப்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய கமல்ஹாசன், “இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்தன. இந்தியன் 2 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு இந்தியன் 3 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் நடைபெறும். தக் லைஇஃப் படம் என்னுடைய பிரச்சாரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கும். கல்கி படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்து முடித்து இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். என்னது 'கல்கி' படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலா?இதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கவில்லை கெஸ்ட் ரோலில் தான் நடித்துள்ளார் என்ற இதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் கல்கி 2898AD படத்தில் வில்லனாக நடிக்கவில்லை கெஸ்ட் ரோலில் தான் நடித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. ஆனால் ரசிகர்கள் கமல்ஹாசனை வில்லனாக பார்ப்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ