நகைச்சுவை நடிகர் சேஷுவின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!
லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சேஷு. இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக பணியாற்றியவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய நகைச்சுவைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் இவர் சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா, A1 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாகவும் சந்தானத்துடன் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவரின் உடல் நிலையை முன்னேற்றம் பெறுவதாக கூறிவந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு சென்ற பின் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரை அகற்றிய உடன் சேஷுவின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவு திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சேஷுவின் உடலுக்கு நடிகர் சந்தானம், லொள்ளு சபா ஜீவா போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து சேஷுவுடன் பழகிய நாட்கள் குறித்தும் அவரின் நினைவுகள் குறித்தும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.