ஃபேமிலி ஸ்டார் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் தேவரகொண்டா, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர். இவர் கடைசியாக குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார். அதன்படி பரசுராம் பெட்லா இயக்கியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இவருடன் இணைந்து சீதாராமம், ஹாய் நான்னா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்டிக் ட்ராமாவாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் (நாளை) மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதே சமயம் படக்குழுவினர் ஹோலி கொண்டாடும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.