17வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறவுள்ள 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான்vsடெல்லிகள் அணிகள் மோதுகின்றன.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 9வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 14 முறையும், டெல்லி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியை பொறுத்தவரையில் டெல்லியை அணியானது தனது முதலாவது வெற்றியை பெற போராடும். அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தனது இரண்டாவது வெற்றியை பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.