ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்க உள்ளார். மேலும் தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான போஸ்டர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ரஜினியை வில்லனிசம் கலந்த கதாபாத்திரத்தில் காண்பிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
The much awaited #Thalaivar171 update is here!
Title revealing teaser from April 22nd 💥 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv pic.twitter.com/vpquKyetp8— Sun Pictures (@sunpictures) March 28, 2024
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு படத்தின் தலைப்பை அறிவித்திருந்தனர். அதன்படி தலைவர் 171 படமும் தரமான வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.