Homeசெய்திகள்இந்தியாசுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

-

 

சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!

புதுச்சேரியில் உள்ள மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த 7 அடி உயர பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 8 தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்த நிலையில், கமல், ராஜேஷ் கண்ணா சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

இந்த விபத்து குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ