கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9 தொகுதிகளில் குறைந்தபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 1 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவிருக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி கரூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் ஏப்.19- ஆம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20- ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27- ஆம் தேதி நிறைவடைந்தது.
மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பரிசீலனை முடிந்து, வேட்புமனுக்களை திரும்பப் பெற நேற்று (மார்ச் 31) மாலை 03.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மொத்தம் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். நோட்டாவை ஒரு வேட்பாளராக எடுத்துக் கொண்டால் 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
31 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!
இதன்படி, அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வடசென்னை, தென் சென்னை, கோவை, திருச்சி, உட்பட 5 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மத்திய சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 24 தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு பயன்படுத்தப்படும்.
குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்கள் கொண்ட நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படும்.
தொகுதி வாரியாக எண்ணிக்கை!
திருவள்ளூர் – 1
வட சென்னை – 3
தென் சென்னை – 3
மத்திய சென்னை – 2
திருபெறும் புதூர் – 2
காஞ்சிபுரம்- 1
அரக்கோணம்- 2
வேலூர் – 2
கிருஷ்ணகிரி- 2
தர்மபுரி- 2
திருவண்ணாமலை- 2
ஆரணி- 2
விழுப்புரம்- 2
கள்ளக்குறிச்சி- 2
சேலம்- 2
நாமக்கல்- 3
ஈரோடு – 2
திருப்பூர்- 1
நீலகிரி – 2
கோவை – 3
பெள்ளாச்சி- 1
திண்டுக்கல்- 1
கரூர் – 4
திருச்சி – 3
பெரம்பலூர் – 2
கடலூர் – 2
சிதம்பரம் – 1
மயிலாடுதுறை – 2
நாகை – 1
தஞ்சாவூர் – 1
சிவகங்கை – 2
மதுரை – 2
தேனி – 2
விருதுநகர் – 2
ராமநாதபுரம் – 2
தூத்துக்குடி – 2
தென்காசி – 1
நெல்லை – 2
கன்னியாகுமரி – 2
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மொத்தம் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். நோட்டாவை ஒரு வேட்பாளராக எடுத்துக் கொண்டால் 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும். 31 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
இதன்படி, அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.