Homeசெய்திகள்தமிழ்நாடுவணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

-

 

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விலை அதிரடியாக குறைப்பு!
File Photo

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 30.50 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.

‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் கேஸ் விலையை நிர்ணயித்து இந்தியன் ஆயில், HP, பாரத் கேஸ் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை கடந்த மூன்று மாதங்களாக ரூபாய் 36 அதிகரித்திருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) ரூபாய் 30.50 குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 30.50 குறைக்கப்பட்டு ரூபாய் 1,930- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூபாய் 818.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ