மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கட்டண முன்பதிவுச் செய்து நேரில் தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 21- ஆம் தேதி கோயிலின் வடக்காடு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதை நேரில் காண விரும்புவோர் 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய்க்கான கட்டண சீட்டுகளைப் பெற்று தரிசனம் செய்யலாம். இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் மற்றும் கோயிலின் இணையதளம் ஆகியவற்றில் ஏப்ரல் 09- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி இரவு 09.00 மணி வரை முன்பதிவுச் செய்யலாம்.
500 ரூபாய் கட்டண சீட்டில் ஒருவர் இரண்டு கட்டண சீட்டுகளை மட்டுமே பதிவுச் செய்ய முடியும். 200 ரூபாய் கட்டண சீட்டு பதிவில் ஒருவர் மூன்று கட்டண சீட்டுகளை மட்டுமே பதிவுச் செய்துக் கொள்ள முடியும். ஒரே நபர் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கட்டண சீட்டுகளை பதிவுச் செய்ய இயலாது.
“கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது?”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!
ஆதார் அட்டை, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய்வற்றைக் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேரில் பதிவுச் செய்துக் கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, உரியவர்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி எண் மூலம் தகவல் வழங்கப்படும்.