சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் ஏப்ரல் 08- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15- ஆம் தேதி தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவர் அமலாக்கத்துறையின் காவலில் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஜாமீன் கோரி கவிதா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, கவிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பண மோசடி தடுப்புச் சட்டம் 45 பிரிவின் கீழ் பெண்களுக்கான பிரிவில் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரினார்.
“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!
கவிதாவின் மகன் பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏப்ரல் 08- ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தார்.