
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்ததால் தங்கநகைப் பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
‘புஷ்பா 2’ படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சர்வதேச பொருளாதார சூழல், உக்ரைன்- ரஷ்யா போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை நிலையற்றுக் காணப்படுகிறது. கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ரூபாய் 5,000 வரை உயர்ந்து, ரூபாய் 50,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும்.
ராஷ்மிகா பிறந்தநாளில் ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 05) காலை 09.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 52,080- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 6,510- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூபாய் 85- க்கு விற்பனை செய்யப்படுகிறது.