சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளிய படத்தின் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் அறிவித்திருந்தனர். அது மட்டும் இல்லாமல் ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாக தலைவர் 171 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் சம்பந்தமாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கடந்த சில தினங்களாக இந்த படத்திற்கு கழுகு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் படத்தில் ரஜினி தாதாவாக நடிக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை போல் மற்ற மொழி நடிகர்களும் தலைவர் 171 இல் நடிக்க உள்ளார்கள் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் முதலில் ஷாருக்கான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். ஒரு சில காரணங்களால் ஷாருக்கான் நடிக்க முடியாமல் போக தற்போது ரன்வீர் சிங்கை களமிறக்க இருக்கிறாராம் லோகேஷ். அதுவும் ரன்வீர் சிங்கின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் லோகேஷ் ரஜினிக்காக தரமான சம்பவத்தை தயார் செய்து வருகிறார் என்ற எதிர்பார்ப்பு மேன்மேலும் அதிகரித்துள்ளது.