Homeசெய்திகள்சினிமாஇரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் 'ரெபல்'!

இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’!

-

இரண்டே வாரங்களில் ஜி.வி. பிரகாஷின் ரெபல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் 'ரெபல்'!கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஜிவி பிரகாஷின் கள்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முன்னதாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ரெபல் திரைப்படம் கடந்த மார்ச் 22-ல் வெளியானது. இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் நிகேஷ் இயக்கியிருந்தார். மேலும் இந்த படம் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் தயாராகி ஜி.வி. பிரகாஷின் இசையிலும் வெளியானது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து மமீதா பைஜு, கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் 'ரெபல்'!இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவனாக போராளியாக நடித்திருந்தார். ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் அளித்தது. இருப்பினும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இரண்டே வாரங்களில் ரெபல் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகியுள்ளது.

MUST READ