Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி கணக்கை தொடங்குமா மும்பை - டெல்லி அணியுடன் இன்று மோதல்!

வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!

-

17வது ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 20வது லீக் போட்டியில் மும்பைvsடெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 19 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 20வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறவுள்ள 20வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 33 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் மும்பை அணி 18 வெற்றியும் டெல்லி அணி 15 வெற்றியும் பெற்றுள்ளன. இதுவரை ஒரு போட்டிகளிலும் வெற்றி பெறாத மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

MUST READ