குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்று தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
நேற்றிரவு நடைபெற்ற 21வது ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. லக்னோ உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கேஎல் ராகுல்ல் லைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 4 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 4 போட்டிகளிலுமே குஜராத் அணி வெற்றியை பெற்றுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி பந்துவீசியது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 33 ரன்னிலும் குயின்டன் டிகாக் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 7 ரன்னிலும் மார்கஸ் ஸ்டோனிஸ் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் 19 ரன்னிலும் சாய் சுதர்சன் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் ஒரு ரன்னில் வெளியேற அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 17 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அணியானது 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக வேகப்பந்து வீச்சாளர் யாஸ் தாகுர் தேர்வு செய்யப்பட்டார்.