Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

-

 

i periyasamy

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

கடந்த 2008- ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வீடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

கொளத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 08) விசாரித்த உச்சநீதிமன்றம், ஐ.பெரியசாமியின் மேல்முறையீடு மனுவை விசாரித்து முடிக்கும் வரை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

MUST READ