நடிகர் விக்ரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இருப்பினும் இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் பெரிதலாகும் வெற்றி சமீப காலமாக வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அதேசமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. இச்சமயத்தில் தான் நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து இந்த படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தங்கலான் படத்தின் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை ஜூன் 26 ஆம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -