வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 10) காலை 11.00 மணிக்கு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாரம்பரிய வேட்டி, சர்ட்டை அணிந்துக் கொண்டு கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு – திருமாவளவன் இரங்கல்!
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “குடும்ப அரசியல், ஊழல் போன்றவற்றால் தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் காப்பிரைட் வைத்துள்ளது தி.மு.க. வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதால் தொழில் வளம் பெருகும். தி.மு.க. என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது.
தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. தமிழகத்தில் மணல் கொள்ளையின் மூலம் மட்டும் ரூபாய் 4,000 கோடி முறைகேடு செய்துள்ளது தி.மு.க. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்புக் கொடுப்பது தி.மு.க. தான்.
“தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்”- தலைமை காஜி அறிவிப்பு!
மக்களை மொழியால், மதத்தால், சாதியால் பிரித்தாளும் வேலையை தி.மு.க. செய்கிறது. தி.மு.க.வின் செயல்களை மக்கள் உணரும் போது அந்த கட்சி செல்லாக்காசாகி விடும்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.