தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட விவகாரத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் பகுதியில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து தேர்தல் பணிமனை திறக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே பெண் பா.ஜ.க. நிர்வாகி மீனாட்சி என்பவரை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பா.ஜ.க.வின் வில்லிவாக்கம் மண்டலத் தலைவர் மருதுபாண்டியன் என்பவரது வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு – திருமாவளவன் இரங்கல்!
சென்னை திருமங்கலம் காவல்துறை குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்னகுமார் தலைமையில் 10- க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை முறையான search warrent இன்றி நடைபெற்றதாகக் கூறி மருதுபாண்டியனின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.