Homeசெய்திகள்தமிழ்நாடுரம்ஜான் பண்டிகை- சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள்!

ரம்ஜான் பண்டிகை- சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள்!

-

 

ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (Chennai Metro Trains) அறிவித்துள்ளது.

குஜராத் அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி!

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (ஏப்ரல் 11) காலை 05.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதேபோல், இன்று காலை 08.00 மணி முதல் காலை 11.00 மணி வரையும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூர் – மும்பை அணியுடன் இன்று மோதல்!

அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரையும், காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும், இரவு 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் 7 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ