இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் வருவது உறுதியாகியுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்திக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை- இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவில் தான் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா கார்களை இந்தியாவில் தயாரிக்க அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருகிறார்.
“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்?”- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி!
இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன், டெஸ்லா தரப்பில் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.