தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 12) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா இன்று தமிழகம் வருகை!
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் பணகுடி, வள்ளியூர், ராதாபுரம், வடக்கன்குளம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் திடீரென்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!
தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி குன்னூர் PTO தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி குன்னூரில் 9 செ.மீ. மழையும், நெல்லை சேர்வலாறு அணை பகுதியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து பகுதியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.