Homeசெய்திகள்தமிழ்நாடு"மகளிர் உரிமைத்தொகை வழங்க தடையில்லை"- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

“மகளிர் உரிமைத்தொகை வழங்க தடையில்லை”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!

-

 

"தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்'- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!
Video Crop Image

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களைச் சந்தித்த போது, “தமிழகத்தில் தற்போது வரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டன. பூத் சிலிப் வழங்கும் பணிகள் இன்றுடன் முடிக்கப்படும் என்று மாவட்டத் தேர்தல்
அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்

புதிய வாக்காளர்களுக்கு இம்முறை 100% வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் 6,000 அட்டைகள் மட்டுமே வழங்க வேண்டி உள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைத் தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளதால், மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1,000 அளிக்க எந்த தடையும் இல்லை” என்றார்.

MUST READ