Homeசெய்திகள்தமிழ்நாடுபெரம்பலூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

பெரம்பலூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரம்பலூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர் நாடு சரியில்லை என்று எவன் பேசுகிறானோ முதலில் அவன் தான் சரியில்லை. என் மக்களிடம் இருக்கும் பெரிய பிரச்சனையே எளிதானதை செய்கிறார்கள் சரியானதை செய்வதில்லை. திமுக வெல்லும் ஏன் வெல்ல வேண்டும். எதற்காக திமுகவிற்கு ஓட்டு போடனும் ஒரு காரணம் சொல்லு. பாரதிய ஜனதாவை வரவிடக்கூடாது வர வைப்பதே அவர்கள் தான். கதவை திறந்து விட்டவர்களே அவர்கள் தான். சீமானுக்கு ஓட்டு போட்டா பிஜேபி வந்துரும் . சீமானுக்கு ஓட்டு போட்டா சீமான் தான்டா வருவா. சீமான் வீட்டில் லைட் போட்டா என் வீட்டில் தான் எரியும் உன் வீட்டில் எரியாது. இஸ்லாமிய கிறிஸ்துவ சொந்தங்கள் என் அன்பு உறவுகள். நாங்கள் பேசுவது இனவெறி அரசியல் இன வெறுப்பு அரசியல் அல்ல. தமிழ் பேரினத்தின் இறையாண்மை அரசியல். தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

மேலும் பேசிய அவர், இந்தியக் துணைக்கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இந்த நாட்டை என் நாடு என சொல்லிக் கொள்ளும் உரிமை ஒரே மொழிக்கு தான் உண்டு அது தமிழ்மொழி மட்டுமே. அது நான் சொல்லல. இஸ்லாமிய சொந்தங்கள் கிறிஸ்தவ சொந்தங்கள் இனிமேலாவது மாறுங்கள். மறுபடியும் மறுபடியும் நீங்கள் 15 விழுக்காடு வாங்கி திமுகவிற்கே செலுத்தி ஒரே ஒரு நன்மை இருக்கு திமுகவினால் இஸ்லாமிய பெருமக்களுக்கு என சொல்லுங்கள் நான் என் மகளை கூட்டிட்டு வீட்டிற்கு போயிடுறேன். என் இந்த திமுக நீ மதவாதத்துக்கு எதிரானவன் தானே. எல்லா பிரச்சனைக்கும் நான் தான் போகனும் ஒட்ட மட்டும் அவனுக்கு போடனும் எவன் துயரத்தை தந்தானோ எவன் மீள முடியாத ஏழ்மை மறுமையை 60 ஆண்டுகாலம் தந்தானோ அவனுக்கு திருப்பி குடுடா காங்கிரஸ் கட்சி சொல்லுதடா தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்று. நீ ஒரு ஓட்டு போடமுடியாது என்று முடிவு எடுடா துடிச்சு சிதறிருவா காங்கிரஸ் இவங்க பயங்கரமா யோசிப்பாங்க தப்பு பண்ணுறதுக்கு நல்லது பண்ணுறதுக்கு ஒன்னு கூட யோசிக்க மாட்டங்க…ஒன்னு தான் என் தம்பி தங்கச்சிகளுக்கு சொல்லுவே நெருப்பை எவ்வளவு நாள் தா குப்பை போட்டு மூடுவ.

தொடர்ந்து பேசிய அவர் நீயும் என்ன என்னதான் நினைச்சு பாக்குற முதல்ல 8 லட்சம் ஓட்டு போட்டா அப்புறம் 12 லட்சம் பேர் ஓட்டு போட்டா இத 1கோடி 20 லட்சமா மாத்துறதுக்கு போராடிட்டு இருக்கே. ஆக்கிட்டே உன்ன என்ன பண்ணுவேனு தெரியாது. என் தம்பி உதயநிதி இந்தா செங்கல தூக்கிட்டு அலையுறா பாரு அண்ணே எங்களுக்கு சமாதி கட்டுற போது இந்த செங்கல வச்சு சமாதி கட்டுங்கனேனு. நானும் என் மகளும் நடந்தே ஓட்டு கேக்குறோம் இந்தா இவங்கள பாரு சாஞ்சிக்கிட்டே ஒட்டு கேக்குறாங்க…குஜராத் மாடலையும், திராவிட மாடலையும் ஒன்னா போட்டு விடு எந்த நாட்டுலையும் செல்லாதுன்ருவா..புரட்சி எப்போதும் வெல்லும் எங்கள் பிள்ளைகள் அதை எங்களுக்கு சொல்லும். என் இலக்கு ஒன்றுதான் நம் இனத்தின் விடுதலை தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க… என் அன்பு மகள் தேன்மொழி வெல்க வெல்க வெல்க….என்று சொல்லி தன் உரையை முடித்தார்.

 

 

MUST READ