Homeசெய்திகள்சினிமா'தலைவர் 171' இல் இணையும் தமிழ் பிரபலங்கள்.... யார் யார் தெரியுமா?

‘தலைவர் 171’ இல் இணையும் தமிழ் பிரபலங்கள்…. யார் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. 'தலைவர் 171' இல் இணையும் தமிழ் பிரபலங்கள்.... யார் யார் தெரியுமா?இதைத் தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் அடுத்ததாக படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என பட குழுவினர் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வந்தது. அதே சமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் இணையத்தில் பருவ தொடங்கின. அந்த வகையில் தலைவர் 171 படத்தில் சாண்டி மாஸ்டர், நடிகை ஷோபனா, ஷாருக்கான் என பலரும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் ரஜினி தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இந்த படத்துக்கு கழுகு என்று தலைப்பிட படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 'தலைவர் 171' இல் இணையும் தமிழ் பிரபலங்கள்.... யார் யார் தெரியுமா?இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி மற்றும் சத்யராஜ் ஏற்கனவே மிஸ்டர் பாரத் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதேசமயம் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் இணைந்து இனிமேல் ஆல்பம் பாடலில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ