கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜா
- Advertisement -
விஜய் பட நடிகை கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து, புதிய பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார்.
கோலிவுட் மட்டுமன்றி பாலிவுட், டோலிவுட் என தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் பூஜா ஹெக்டே . தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான பூஜாவுக்கு தெலுங்கில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இவர் சமீபத்தில் நடித்த ராதே ஷ்யாம், ஆச்சார்யா, கிசி கா பாய் கிசி கி ஜான், உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து, பூஜா ஹெக்டே, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். அதன் பின் பூஜா இந்தியில் ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ என்ற படத்தில் நடித்தார். தமிழில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் தான் அது. அந்தப் படம் தோல்வி அடைந்தது. இதனிடையே, அவர் இந்தியில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 45 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பாந்தரா பகுதியில் கடற்கரையை பார்த்தபடி இந்த பங்களா அமைந்துள்ளதாம்.