Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!

-

- Advertisement -

 

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!

முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 15) மாலை காலமானார். அவருக்கு வயது 74.

மலையாளப் பக்கம் திரும்பிய நயன்தாரா…நிவின்பாலி படத்தில் ஒப்பந்தம்…

யார் இந்த இந்திரகுமாரி என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 1991- ஆம் ஆண்டு நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டப்பேரவைக்கு சென்றவர் இந்திரகுமாரி. அதைத் தொடர்ந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.

கடந்த 2006- ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைத்துக் கொண்ட அவருக்கு தி.மு.க.வின் இலக்கிய அணியின் மாநில தலைவர் பொறுப்பை வழங்கியது அக்கட்சி தலைமை.

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவு

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் மறைவிற்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ