Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் ரீமேக்காகும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே... பிரபல இயக்குநர் ஒப்பந்தம்...

தெலுங்கில் ரீமேக்காகும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே… பிரபல இயக்குநர் ஒப்பந்தம்…

-

- Advertisement -
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

விப்பின் தாஸ் இயக்கத்தில் பசில் யோசப் இந்த படத்தில் நாயகனாக நடித்திருப்பார். தர்ஷனா ராஜேந்திரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர், ஹிருதயம், இரும்புத்திரை ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இருவரும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் மலையாள மொழியில் வெளியான போதிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுமட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸில் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்து, மாபெரும் சாதனயைும் படைத்தது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வௌியிடப்பட்டது. தொடர்ந்து இந்தியிலும் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

தெலுங்கு பதிப்பில் பிரபல டோலிவுட் இயக்குநரும், நடிகருமான தருண் பாஸ்கர் நடிக்கிறார். இவர், ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு நண்பராக நடித்திருப்பார். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ