நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்தை 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து கோட் படத்தின் விசில் போடு எனும் பாடல் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி இருந்த நிலையில் விஜய் முதன்முறையாக யுவன் இசையில் பாடி இருந்தார். இந்த பாடலுக்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் இன்னொரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்களும் எழத் தொடங்கின. இந்நிலையில் இந்த பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “விசில் போடு பாடலை சிலர் அரசியலுடன் தொடர்புபடுத்தி தவறாக புரிந்து கொள்கின்றனர். இது ஒரு வீடியோ கேம் பார்ட்டி. புது மிஷன் ஒன்றுக்கு அனைவரையும் வரவேற்கும் விதமான பாடல் இது. முதலில் இந்த பாடலை சல்யூட் என்றுதான் எழுதினேன். அது சரியாக பொருந்தவில்லை என்பதால் விசில் போடு என மாற்றினேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -