Homeசெய்திகள்சினிமாகாளியாக களமிறங்கும் விக்ரம்... சியான்62 தலைப்பு அறிவிப்பு...

காளியாக களமிறங்கும் விக்ரம்… சியான்62 தலைப்பு அறிவிப்பு…

-

விக்ரம் நடிக்கும் 62-வது படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் ஹேட்டர்ஸே இல்லாத ஒரு நாயகன் என்றால் அது சியான் தான். சியான் என கொண்டாடப்படும் விக்ரம் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக பொன்னியன் செல்வன் திரைப்படங்கள் வெளியாகின. கரிகால சோழனாக விக்ரம் நடித்து பாராட்டைப் பெற்றார். விக்ரம் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போகிறது.

இதையடுத்து, விக்ரம் நடிக்கும் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது.. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ரியா ஷிபு படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைத்துள்ளனர். முதலில் இரண்டாம் பாகத்தை வௌியிடுவதாகவும், அடுத்து முதல் பாகத்தை வெளியிடுவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், தலைப்பு டீசரையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

MUST READ